Begin typing your search above and press return to search.
மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியை திருவண்ணாமலை கலெக்டர் பார்வையிட்டார்
HIGHLIGHTS

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் திரு முருகேஷ், மேற்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்பு நடைபெற்ற தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்டம் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வங்கி மேலாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், களப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.