தீபத் திருவிழா அனுமதி கிடைக்குமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவிற்கு இந்த ஆண்டாவது அனுமதி கிடைக்குமா என பக்தர்கள் எதிர்பார்ப்பு

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தீபத் திருவிழா அனுமதி கிடைக்குமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு
X

அண்ணாமலையார் கோயில் தேர்கள் சீரமைக்கும் பணி தொடங்கியது .

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவின் ஏழாம் நாளன்று தேரோட்டம் நடைபெறும். விழாவின் நிறைவு நாளன்று மகாதீபம் மலைமீது ஏற்றப்படும்.

ஆனால் தற்போது கொரோனா தோற்று பரவல் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எனவே மகா தேரோட்டமும், மாட வீதியுலா உற்சவமும் நடைபெறவில்லை.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை பௌர்ணமி கிரிவலம் தடை தொடர்கிறது. இந்நிலையில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி கிரிவலம் மற்றும் தீபத் திருவிழாவுக்கு அனுமதி கிடைக்குமா என்று பக்தர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் பத்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதை தொடர்ந்து 19ஆம் தேதி மகா தீபத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தீபத் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா, தேரோட்டம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. படிப்படியாக கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் பங்கேற்க அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தேர்களை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. தேர் பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த இரும்பு தகடுகள் அகற்றப்பட்டன. இதுபற்றி கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது தேர்களை ஆண்டுதோறும் சீரமைத்து பராமரித்தால் தொடர்ந்து அவற்றை பயன்படுத்தும் நிலையில் இருக்கும். தொடர்ந்து பராமரிப்பு இல்லாமல் மூடி வைத்திருந்தால் தேர் சக்கரங்கள், மரத்தூண்கள், அச்சு போன்றவை பாதிப்படையும், எனவே தேர்களை வழக்கம்போல சீரமைக்கவும், அரசு அனுமதி அளித்தால் இந்த ஆண்டு தேரோட்டம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் தயாராகி வருகிறது எனக் கூறினார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் மாறுதலில் சென்று விட்டதால் தற்போது கடலூர் இணை ஆணையர் கூடுதல் பொறுப்பு வகிக்கின்றார். தீபத் திருவிழா வருகின்ற இந்த வேளையில் அண்ணாமலையார் கோவிலுக்கு உடனடியாக இணை ஆணையர் நியமிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 14 Oct 2021 1:00 PM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி
  திருச்சி மாவட்டத்தில் 23ம் தேதி 45 பேருக்கு கொரோனா
 2. தஞ்சாவூர்
  தஞ்சாவூர் மாவட்டத்தில் 23ம் தேதி 54 பேருக்கு கொரோனா
 3. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் 23ம் தேதி 2 பேருக்கு கொரோனா
 4. தியாகராய நகர்
  தமிழகத்திற்கு 500 மின்சார பேருந்து : அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
 5. பெரம்பலூர்
  பெரம்பலூர் மாவட்டத்தில் 23ம் தேதி ஒருவருக்கு கொரோனா
 6. இராமநாதபுரம்
  ராமநாதபுரம் மாவட்டத்தில் 23ம் தேதி ஒருவருக்கு கொரோனா
 7. அந்தியூர்
  அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை தடுப்பணை உடைந்து விவசாய பயிர்கள் சேதம்
 8. சிவகங்கை
  சிவகங்கை மாவட்டத்தில் 23ம் தேதி 11 பேருக்கு கொரோனா
 9. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்டத்தில் 23ம் தேதி 16 பேருக்கு கொரோனா
 10. பாளையங்கோட்டை
  நெல்லையில் பாரம்பரிய சரிவிகித உணவு திருவிழா கண்காட்சி