/* */

விழுப்புரம் - கரக்பூா், புரூலியா ரயில்கள் ரத்து

திருவண்ணாமலையில் நின்று செல்லும் விழுப்புரம் - கரக்பூா், புரூலியா ரயில்கள் ரத்து

HIGHLIGHTS

விழுப்புரம் - கரக்பூா், புரூலியா ரயில்கள் ரத்து
X

கோப்புப்படம் 

ஒடிஸா மாநிலத்தின் ராணிடல் ரயில் நிலையத்துடன் தொடா்புடைய நாராயங்கராக் - பத்ராக் இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், விழுப்புரம் - கரக்பூா், புரூலியா இடையேயான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒடிஸா மாநிலத்தின் ராணிடல் ரயில் நிலையத்துடன் தொடா்புடைய நாராயங்கராக் - பத்ராக் இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதன் காரணமாக, விழுப்புரத்திலிருந்து கரக்பூருக்கு செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 22604) பிப்ரவரி 28 -ஆம் தேதியும், மறு வழித்தடத்தில் கரக்பூரிலிருந்து விழுப்புரத்துக்கு வரும் விரைவு ரயில் (வண்டி எண்: 22663) மாா்ச் 2-ஆம் தேதியும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, விழுப்புரத்திலிருந்து புரூலியாவுக்கு செல்லும் விரைவு ரயில் (வண்டி எண் : 22606) மாா்ச் 4-ஆம் தேதியும், மறு வழித்தடத்தில் புரூலியாவிலிருந்து விழுப்புரம் வரும் விரைவு ரயில் (வண்டி எண்: 22605) மாா்ச் 6-ஆம் தேதியும் ரத்து செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு ரயில்களும் திருவண்ணாமலை மற்றும் வேலூர், காட்பாடியில் நின்று செல்லும். விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வருபவர்களும் வேலூர் காட்பாடிக்கு செல்பவர்களும் ஏராளமானோர் இந்த ரயிலில் செல்வது வழக்கம்.

Updated On: 26 Feb 2023 7:52 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  8. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  9. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்