/* */

திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் வந்த யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள்

தூத்துக்குடியில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள் வந்து சேர்ந்தன.

HIGHLIGHTS

திருவண்ணாமலைக்கு  ரயில் மூலம் வந்த யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள்
X

ரயில் மூலம் வந்தத  யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 603 டன் யூரியா, 684 டன் ஸ்பிக் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் தூத்துக்குடியில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் வந்தது.

இதனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதற்காக பிரித்து லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியினை வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) சரவணன் மற்றும் வேளாண்மை துறை சார்ந்த அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அலுவலர்கள் கூறியதாவது,

நடப்பு மாதத்திற்கு 9 ஆயிரத்து 703 டன் யூரியா, 1173 டன் டி.ஏ.பி., 304 டன் பொட்டாஷ், 526 டன் சூப்பர் பாஸ்பேட், 4 ஆயிரத்து 309 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண் வள அட்டை பரிந்துரையின்படி பயிருக்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் ரசீது பெற்று பயன்பெறலாம்.

மேலும் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் விற்பனை முனைய கருவி வாயிலாக விவசாயிகளுக்கு உரம் வினியோகம் செய்திடவும் மற்றும் விவசாயிகள் விரும்பாத இதர இடுபொருட்கள் இல்லாத உரங்களை வழங்கிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. உர விற்பனை நிலையங்களில் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 மீறிய செயல்கள் கண்டறிந்தால் உரிய உர விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Updated On: 7 Jun 2023 2:04 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?