/* */

அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்யலாம்: உதவி ஆணையர் தகவல்

திருவண்ணாமலை மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

HIGHLIGHTS

அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்யலாம்: உதவி ஆணையர் தகவல்
X

அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி வெளியிட்டுள்ள தகவல்: மத்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க உச்சநீதிமன்ற உத்தரவின் படி அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் ஒன்றை www.eshram.gov.in என்ற இணையதள முகவரியில் உருவாக்கியுள்ளது.

அதன்படி இந்த இணையதளத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், ரிக்‌ஷா வண்டி இழுப்பவர்கள், தெரு வியாபாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், வீட்டுவேலை பணியாளர்கள், கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் நிரந்தர வருமானம் இல்லாத அனைத்து தொழிலாளர்களும் இந்த தரவு தளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு செய்யும் பணி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுசேவை மையங்களிலும் நடைபெற்று வருகிறது.

மாநில அரசின் பல்வேறு வகையான நலத் திட்டங்களின் கீழ் பதிவு செய்து உள்ள அனைத்து தொழிலாளர்களும் இந்த இணையதளத்தின் கீழ் பதிவு செய்யலாம். இந்த தரவு தளத்தில் தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள 16 வயது முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை, முற்றிலும் இலவசம். பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்டு உள்ள மொபைல் எண், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பிறந்த தேதி, பிறந்த ஊர், எந்த சமூகத்தினை சேர்ந்தவர் ஆகிய விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த தகவல்களை பதிவேற்றம் செய்த உடன் பயனாளிகளுக்கு 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஏதும் பிற காரணங்களுக்காகவோ புலம் பெயர நேர்ந்தாலும் அரசிடம் இருந்து பெற வேண்டிய சலுகைகளை பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும்.

இந்த தரவு தளத்தில் தன்னை இணைத்து கொள்ளும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு பி.எம்.எஸ்.பி.ஒய். என்ற திட்டத்தின் மூலமாக பெறலாம் என திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தெரிவித்து உள்ளார்.

Updated On: 14 May 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி