/* */

திருவண்ணாமலை; நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் , தொடங்கி வைக்கப்பட்டது

HIGHLIGHTS

திருவண்ணாமலை; நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறப்பு
X

மக்கள் நல்வாழ்வு மையங்களை திறந்து வைத்து பார்வையிட்ட துணை சபாநாயகர் மற்றும் கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள், தொடங்கி வைக்கப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நேற்று சென்னையில் நகர்புற நல்வாழ்வு மையத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் திருவண்ணாமலை நகராட்சி சென்ட்ரல், அண்ணா நகர் மற்றும் கீழ்நாத்தூர் என மூன்று நகர்ப்புற நல்வாழ்வு மையங்களும், ஆரணி நகராட்சியில் ஆரணி நகர்ப்புற நல்வாழ்வு மையம் என மொத்தம் நான்கு நகர நல்வாழ்வு மையங்கள் தலா ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை திறந்து வைத்ததை தொடர்ந்து

திருவண்ணாமலை ஈசானியம் மைதானம் அருகே உள்ள சென்ட்ரல் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

பின்னர் பழைய அரசு மருத்துவமனையில் மது பழக்கத்திற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை நகராட்சி செங்கம் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக மறுவாழ்வு மையம் தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி அங்கு கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், இங்கு மது பழக்கத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும். சிகிச்சை மற்றும் மது போதை மீட்புக்காக 24 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் தேவையான படுக்கை வசதிகள் செய்து தரப்படும். இந்த மருத்துவமனையில் மனநல மருத்துவரின் மேற்பார்வையில் உள் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்படும்.

இந்த மறுவாழ்வு மையத்தில் மன நல மருத்துவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் செய்யாறு தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து வந்து சிகிச்சை அளிப்பார்கள். மேலும் இந்த மறுவாழ்வு மையம் காவல் துறையின் கண்காணிப்பில் செயல்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், துணை இயக்குநர்கள் (சுகாதார பணிகள்) செல்வகுமார் (திருவண்ணாமலை), சதீஷ் (செய்யாறு), திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா கார்த்திக் வேல்மாறன், நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம் , நகர மன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 7 Jun 2023 1:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  7. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  8. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  9. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  10. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு