/* */

திருவண்ணாமலை நகர் மன்ற கூட்டம்: அதிமுக திமுக உறுப்பினர்கள் காரசார விவாதம்

நகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளில் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்வதில்லை என குற்றம்சாட்டினர்

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகர் மன்ற கூட்டம்: அதிமுக திமுக உறுப்பினர்கள் காரசார விவாதம்
X

திருவண்ணாமலை  நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமையில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில்  விவாதத்தில் ஈடுபட்ட திமுக  அதிமுக உறுப்பினர்கள்

திருவண்ணாமலை நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது . துணைத் தலைவர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார் . ஆணையாளர் முருகேசன் உட்பட நகர மன்ற அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் திமுக அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

நகர மன்ற கூட்டம் தொடங்கியதுமே அ.தி.மு.க.வை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் பேசுகையில், பல பகுதிகளில் பாதாள சாக்கடை, கழிவுநீர் கால்வாய் சாலை, குடிநீர் மின்மோட்டார்கள் பழுதடைந்ததை சரி செய்யவில்லை. நகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளில் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்வதில்லை என்று கூறினர்.

அப்போது திமுக உறுப்பினர்கள் சிலர் எழுந்து எங்களுடைய வார்டுகளை பற்றி அதிமுக உறுப்பினர் பேச வேண்டிய அவசியம் இல்லை அவர்களுடைய வார்டு பற்றி மட்டும் பேசட்டும் என்று குறுக்கீடு செய்தனர்.அதிமுக நகர மன்ற உறுப்பினர் பழனி பேசுகையில் தான் 39 வார்டுகளுக்கும் சேர்த்து பேசுவதாக கூறியதை திமுக உறுப்பினர்கள் ஏற்கவில்லை அதை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் திமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் எழுந்தது,

பின்னர் நகர மன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் கூறுகையில், 39 வார்டுகளிலும் பாரபட்சமின்றி பணிகள் நடைபெற்று வருகிறது. வார்டுகளில் எந்த குறைகள் இருந்தாலும் உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தால் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். சாலை மற்றும் கால்வாய் பணிகள் தரமாக நடைபெற்று வருகிறது என்றார்.

நகர மன்ற தலைவர் பேசியதைத் தொடர்ந்து மீண்டும் கூட்டம் நடைபெற தொடங்கியது.நகர மன்ற பணியாளர்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை நகர மன்ற உறுப்பினர்கள் கூறினர்.அப்போது பேசிய நகராட்சி ஆணையாளர், மன்றத்தில் நிறைவேற்றப்படுகிற தீர்மானங்களுக்கு ஏற்ப நகராட்சி ஊழியர்கள் செயல்பட வேண்டும், அப்படி செயல்படாதவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து வார்டு உறுப்பினர் தாங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதித்தனர்.கூட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சிக்கு சொந்தமான காந்தி நகரில் உள்ள காலியிடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தரைத்தளத்தில் காய்கறி மற்றும் பழக்கடைகளும், முதல் தளத்தில் 121 பூக்கடைகளும் என 249 கடைகள் கொண்ட வணிக வளாகம் ரூ.30 கோடியே 10 லட்சத்தில் கட்டுவதற்கு திட்ட அறிக்கை அனுப்புவது என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்த 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 28 March 2023 3:12 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?