/* */

திருவண்ணாமலை மக்கள் குறைதீர் கூட்டம்: பொதுமக்கள் 605 மனுக்கள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 605 மனுக்கள் வர பெற்றன.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மக்கள் குறைதீர் கூட்டம்: பொதுமக்கள் 605 மனுக்கள் அளிப்பு
X

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் சார்பில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து வங்கி கடனுதவி முதியோர் உதவித்தொகை இலவச மனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 605 மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த மனுக்கள் மீதும், ஏற்கனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்திலும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த சுவரொட்டி தயாரித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மூன்று மாணவிகள் ஸ்லோகன் தயாரித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மூன்று மாணவிகளுக்கு பரிசு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ் வருவாய் கோட்டாட்சியர்கள் வெற்றிவேலு கவிதா விஜயராஜ் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் வெங்கடேசன் வேளாண் இணை இயக்குனர் முருகன் மகளிர் திட்ட இயக்குனர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 May 2022 1:54 AM GMT

Related News