/* */

திருவண்ணாமலை பேருந்து நிலைய கழிப்பிட கொள்ளை: அமைச்சர் வேலு கவனிப்பாரா?

திருவண்ணாமலை பேருந்து நிலைய இலவச கழிப்பிடம் தற்போது கட்டண கழிப்பிடமாக மாறி கொள்ளையடிப்பது தொடர்கிறது

HIGHLIGHTS

திருவண்ணாமலை பேருந்து நிலைய கழிப்பிட கொள்ளை: அமைச்சர் வேலு கவனிப்பாரா?
X

கட்டண கொள்ளை நடைபெறும் திருவண்ணாமலை பேருந்து நிலைய கட்டண கழிப்பிடம்'

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியே வரும் பகுதியில் இருக்கும் கழிப்பறை இதுவரை இலவசமாக இருந்து வந்தது. அந்த கழிப்பறை தற்போது கட்டண கழிப்பறையாக மாற்றும் செய்யப்பட்டுள்ளது,

கட்டணம் வசூலிப்பவர்கள் செய்யும் அடாவடி சொல்லி மாளாது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் ரூ.10 வசூலிக்கிறார்கள். இதுவரை இலவசமாக தானே இருந்தது, தற்போது ஏன் கட்டணம் வசூலிக்கிறீர்கள் என கேட்டால் அது அப்படித்தான் என கூறுகின்றனர்.

சிறுநீர் கழிப்பதற்கு ரூ. 10 அதிகம் என்று கேட்டால், எங்க சொல்லணுமோ அங்க போய் சொல்லு.. அமைச்சர்ட்ட போவியா போ என எடுத்தெறிந்து பேசுகின்றனர். ஆண்களாவது இலவச கழிப்பிடத்தை தேடி செல்கின்றனர். பெண்கள் பாடு பெரும்பாடாக உள்ளது. இரவு நேரத்தில் வேறு வழியில்லாமல் ரூ. 10 கொடுத்து செல்கிறார்கள். மேலும் கேள்வி கேட்டால், இது அமைச்சர் ஏற்பாட்டில் உள்ளது என கூறுகின்றனர்.

பெண்களுக்கு இலவச பேருந்து வசதி அளித்துள்ள அரசு, இயற்கை உபாதை கழிக்க கட்டணம் வசூலிப்பது, நகைமுரணாக உள்ளது. அரசியல்வாதிகளின் பெயரை பயன்படுத்தி அநியாய கொள்ளை வசூலிப்பதை தடுத்து நிறுத்துமா?

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இதே போன்ற கட்டணக் கொள்ளையை, கலெக்டர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தார்.

திருவண்ணாமலையை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றுவேன் என அமைச்சர் எ. வ வேலு மற்றும் மாவட்ட ஆட்சியர் கூறுகின்றனர், ஆனால், இந்த கட்டணக் கொள்ளையை யார் தடுத்து நிறுத்தப் போகிறார்கள்?

Updated On: 26 May 2022 1:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  3. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  4. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  5. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  6. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  7. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  8. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்