/* */

மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு நீதி கேட்டு இளைஞர்கள் திடீர் சாலை மறியல்

திருவண்ணாமலையில் மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு நீதி கேட்டு சாலை மறியலில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு நீதி கேட்டு  இளைஞர்கள் திடீர் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள்.

கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று போராட்டம் தீவிரமடைந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் ரெயில்வே கேட் அருகில் இளைஞர்கள் ஒன்றுகூடி உயிரிழந்த ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு கையில் கருப்பு கொடிகளை ஏந்தியும், பதாகைகளை ஏந்தியும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாலை டவுன் துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் மற்றும் தாசில்தார் சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்ட இளைஞர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.

Updated On: 18 July 2022 4:33 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!