/* */

திருவண்ணாமலை சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் திடீர் ரத்து

நிர்வாக காரணங்களால் வெள்ளோட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு

HIGHLIGHTS

திருவண்ணாமலை சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் திடீர் ரத்து
X

திருவண்ணாமலை சுப்ரமணியர் தேர் சீரமைக்கும் பணி 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவம்பர் 27ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்குகிறது. இந்த திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் கோலாலமாக நடைபெறும். பத்துநாட்களும் காலையில் விநாயகர், சந்திரசேகரும் , இரவு நேரங்களில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர்,வள்ளி, தெய்வானையும் உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையாரும் , பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் மாடவீதியில் வீதி உலா நடைப்பெற்றும் அதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.

வருகின்ற டிசம்பர் 3-ஆம் தேதி ஏழாம் திருநாளான அன்று மாட வீதிகளில் விநாயகர், சுப்ரமணியர், அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச ரதங்களும் மாட வீதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியே பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து வலம் வரவுள்ளனர்.

கடந்த டிசம்பர் 3ஆம் தேதி மகா தேரோட்டத்தின் போது சுப்பிரமணியர் தேர் பழுதடைந்தது. கடந்த 3 மாதங்களாக ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தேர் அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிவடைந்தது.

இந்நிலையில் இன்று வெள்ளோட்டம் நடைபெறுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் பணிகள் முழுமையாக முடியவில்லை, 90% அளவிலான பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. இதனால் இன்று நடைபெற இருந்த வெள்ளோட்டத்தை கோவில் நிர்வாகம் வேறு தேதிக்கு மாற்றி உள்ளது.

பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் வெள்ளோட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கோயில் இணை ஆணையர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Nov 2022 7:20 AM GMT

Related News