/* */

கருக்கலைப்பால் மாணவி உயிரிழப்பு: போலி பெண் மருத்துவர் உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை அருகே கருக்கலைப்பால் 10ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். போலி பெண் மருத்துவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கருக்கலைப்பால் மாணவி உயிரிழப்பு: போலி பெண் மருத்துவர் உட்பட 3 பேர் கைது
X

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி, மலையனூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. அவரது மகன் முருகன் (வயது 27), தொழிலாளி. இவர், அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரை அடிக்கடி தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்று உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி அது காதலாக மாறியுள்ளது.

அப்போது ஆசைவார்த்தை கூறி முருகன் பலமுறை மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்தார். இதனால் முருகன் மாத்திரை கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார். மீண்டும் வழக்கம் போல் முருகனும், மாணவியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் மாணவி 2-வது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். 4 மாத கர்ப்பம் ஆன நிலையில் கருவை கலைக்க முடிவு செய்துள்ளனர். அவரை மலையனூர் செக்கடி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் பிரபு என்பவரது உதவியுடன் ரெட்டியார் பாளையம் கிராமத்திற்கு முருகன் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்த ஜெயராஜ் மனைவி காந்தி (65), போலி பெண் டாக்டரிடம் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியை பரிசோதித்த அந்த போலி டாக்டர், 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் கருவை கலைக்க கடந்த 2 நாட்களாக ஊசி செலுத்தப்பட்டுள்ளது. . பின்னர் அந்த வீட்டில் இருந்து மாணவி நடந்து சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஒரு பேக்கரி அருகே மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மாணவியை சிகிச்சைக்காக தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவி இறந்துவிட்டதாகவும், 4 மாத கர்ப்பிணியாக இருப்பதையும் உறுதி செய்தனர்.

இதுகுறித்து மாணவியின் தந்தை தானிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை ஏமாற்றி கற்பழித்து கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்து கொலை செய்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் மாணவி கர்ப்பிணியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவியை கர்ப்பிணியாக்கி, கருக்கலைப்பு செய்ய முயன்ற முருகன், அவருக்கு துணையாக இருந்த பிரபு ஆகிய இருவரையும் தானிப்பாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் கைது செய்தார். மேலும் தலைமறைவாக இருந்த மூதாட்டி காந்தியை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 29 Jun 2022 6:37 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?