திருவண்ணாமலை 100 தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட மாவட்டமாக விளங்கும்: அமைச்சர் வேலு

திருவண்ணாமலை மாவட்டம் 100 சதவீத தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட மாவட்டமாக விளங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் வேலு கூறினார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலை 100 தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட மாவட்டமாக விளங்கும்: அமைச்சர் வேலு
X

தடுப்பூசி போடும் பணியை அமைச்சர்  வேலு ஆய்வு மேற்கொண்டார். 

திருவண்ணாமலை நகராட்சி சார்பில் 39 வார்டு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், பஸ் நிலையம், என பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறுகையில், ஆன்மீக நகரமான திருவண்ணாமலை கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தற்போது ஊரடங்கு தளர்வினால் கோயில்கள் ஆசிரமங்கள் திறக்கப்பட்ட நிலையில் இந்த ஊருக்கு அதிக அளவில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி செலுத்தும் பணி தற்போது திருவண்ணாமலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் வணிகர்கள், உணவகம் நடத்துபவர்கள், ஆட்டோ டிரைவர்கள், திருக்கோயில் மற்றும் ஆசிரமங்களில் பணிபுரியும் ஊழியர்கள், என பலதரப்பட்ட அவர்களுக்கு அவசியம் தடுப்பூசி செலுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் உள்ள 39 வார்டுகளிலும் வீடுவீடாக உன் களப்பணியாளர்கள் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் 100 சதவீத தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட மாவட்டமாக இலக்கினை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

பின்னர், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பழங்களை வழங்கினார். தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தார். அப்போது, ஆட்சியர் பா.முருகேஷ், கோட்டாட்சியர் வெற்றிவேல், உதவி ஆட்சியர் ரவி, சுகாதாரத் துறை துணை இயக்குநர் அஜிதா, நகராட்சி ஆணையாளர் சந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 July 2021 7:43 AM GMT

Related News

Latest News

 1. வாணியம்பாடி
  பேருந்து  படியில் நின்று ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்
 2. தேனி
  தென்காசியில் 19ம் தேதி தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம்
 3. தென்காசி
  ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதிக்கு தென்காசியில் மவுன...
 4. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வாக்காளர்...
 5. திருப்பூர் மாநகர்
  திருப்பூரில் மோட்ச தீபம் ஏற்றி பிபின் ராவத்திற்கு பாஜகவினர் அஞ்சலி
 6. ஈரோடு
  ஈரோடு: கொரோனா நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
 7. பெரம்பலூர்
  பெரம்பலூர்: கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு
 8. இந்தியா
  நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிவதற்கான தொழில்நுட்பம்: ஜிதேந்திர சிங்...
 9. இந்தியா
  வேலைவாய்பில் முன்னேற்றம்: செப்டம்பரில் 15.41 லட்சம் பேர் வருங்கால...
 10. குமாரபாளையம்
  குமாரபாளையம் துணை தாசில்தார் பொறுப்பேற்பு