/* */

பி.சி எம்பிசி மாணவர்களுக்கு உதவித்தொகை: மாவட்ட ஆட்சியர் தகவல்

உயர்கல்வி படிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க திருவண்ணாமலை கலெக்டர் தகவல்

HIGHLIGHTS

பி.சி எம்பிசி மாணவர்களுக்கு உதவித்தொகை: மாவட்ட ஆட்சியர் தகவல்
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர்கல்வி படிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் ஐஐடி, மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இன மாணவ மாணவிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தகுதியுள்ள மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 2 லட்சம் வரை கல்வி உதவி தொகையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த உதவி தொகையை பெற ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 2021-22 ஆண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இணையதளம் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

மேலும் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும் கல்வி நிறுவனங்கள் தங்களது ஒப்புதலுடன் தகுதியான விண்ணப்பங்களை பரிந்துரை செய்து பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்

Updated On: 19 Aug 2021 5:47 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  2. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  4. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  7. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  9. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  10. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு