ரூ100 கோடி மதிப்பிலான அண்ணாமலையார் கோயில் சொத்து மீட்பு

திருவண்ணாமலையில் நீதிமன்ற உத்தரவையடுத்து அம்மணி அம்மன் மட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ரூ100 கோடி மதிப்பிலான அண்ணாமலையார் கோயில் சொத்து மீட்பு
X

ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்படும் ஆக்கிரமிப்பு கட்டிடம்

திருவண்ணாமலை அடுத்த சென்ன சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த அம்மணி அம்மாள் , சிவபெருமான் மீது கொண்ட அளவற்ற பக்தியால் திருவண்ணாமலைிலேயே தங்கி ஓம் நமச்சிவாய மந்திரத்தினை உச்சரித்து திருநீறு தந்து எண்ணற்றவர்களின் நோய்களையும் வாழ்க்கை பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் வடக்கு கோபுரம் பாதி கட்டப்பட்ட நிலையைக் கண்டு அம்மணி அம்மாள், பக்தர்கள் செல்வந்தர்களின் உதவியை நாடி அந்த கோபுரத்தின் திருப்ப பணியை முடித்தார்.

அதனால் அந்த கோபுரம் அவர் பெயராலேயே அம்மணி அம்மாள் கோபுரம் என்று அழைக்கப்படுகின்றது. இவருடைய ஜீவசமாதி திருவண்ணாமலை ஈசானிய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது.

அம்மணி அம்மாள் கோபுர திருப்பணி நடைபெறும் போது கோபுரத்திற்கு எதிரில் மடம் அமைத்து அதில் தங்கி கோபுரம் கட்டும் பணிகளை மேற்கொண்டார், அந்த மடத்தில் சிவபெருமான் உள்ளிட்ட சாமி சிலைகளை வைத்து வழிபாடு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. அவரது மறைவுக்குப் பிறகு அந்த இடம் அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கி இளைப்பாறவும் உணவு உண்ணவும் பயன்பட்டு வந்தது.


பின்னர் அந்த மடம் காலப்போக்கில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. அங்கிருந்த சாமி சிலைகளும் அம்மணி அம்மாள் பயன்படுத்திய எண்ணற்ற பொருட்களும் மாயமானதாக கூறப்படுகிறது. பிறகு அந்த மடத்தின் இடத்தில் தற்போது பாஜகவின் ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவில் மாநிலத் துணைத் தலைவராக உள்ள வழக்கறிஞர் சங்கர் அந்த இடத்தை ஆக்கிரமித்து மாடி வீடும் கட்டி இருந்தார்.

இந்நிலையில் திருவண்ணாமலை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு அண்ணாமலையார் கோயிலுக்கு சாதகமாக நேற்று தீர்ப்பு வந்தது. அதாவது தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறையின் ஆளுகைக்குட்பட்ட அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் உடன் இணைந்த அம்மணி அம்மாள் மடத்திற்கு திருவண்ணாமலை நகரம் 22 ஆவது பிளாக் கதவிலக்க எண் 9 சர்வே எண் 1377 ல். 23800 சதுர அடி அளவுள்ள இடம் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமானது.

அவ்விடத்தில் தீபா சங்கர் (அதாவது சங்கரின் மனைவி) அந்த இடத்தை ஆக்கிரமித்து உள்ளார் என இந்து சமய அறநிலைத்துறை , உதவி ஆணையாளர் முன்மொழிவு சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கைகளை ஆய்வு செய்ததில் உதவி ஆணையர் சமர்ப்பித்த மேற்படி புகாரில் பூர்வாங்க ஆதாரம் இருப்பதாக கருதப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இது சம்பந்தமான விசாரணை 12.11.21 அன்று முதல் நடைபெற்று வந்த நிலையில் திருக்கோயில் நலனுக்கு எதிராக எதிர்மனுதாரரால் திருவண்ணாமலை சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அசல் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. எனவே ஆக்கிரமிப்பு செய்துள்ள இடம் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சொந்தமானது என முடிவு செய்யப்படுகிறது.

இதன் ஆக்கிரமிப்பாளர்களான சங்கர் மற்றும் தீபா என்பவர்கள் தொடர்ந்து சட்ட ஏற்பிலா அனுபவம் செய்து வருகின்றார்கள் என்பதும் தற்போது அவர்கள் அந்த சொத்தில் அனுபவத்தில் இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது எனவே திருக்கோயில் சொத்திற்கு தொடர்ந்து வருவாய் இழப்பீடு ஏற்படுத்தியும் திருக்கோயில் சொத்தினை பாதுகாத்திடும் பொருட்டும் இனி வருங்காலங்களில் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்கவும் மேற்படி ஆக்கிரமிப்பினை காவல்துறை உதவியுடன் அகற்றிட திருவண்ணாமலை உதவி ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை ஏடிஎஸ்பி சௌந்தர்ராஜன் தலைமையில் இரண்டு டிஎஸ்பிகள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 200க்கும் அதிகமான காவல்துறையினர்அம்மணி அம்மாள் கோபுரத்தின் முன் குவிக்கப்பட்டனர்.

ஐந்து ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டது. அதிகாலை கோட்டாட்சியர் மந்தாகினி மேற்பார்வையில் வருவாய்த்துறை, நகராட்சி, இந்து சமய அறநிலையத்துறை ஆகிய துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட துவங்கினர்.


இதனால் அந்தப் பகுதி முழுவதும் காவல்துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேறு கோபுரம் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 2023-03-20T12:24:46+05:30

Related News

Latest News

 1. விளையாட்டு
  கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
 2. தஞ்சாவூர்
  உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
 3. தமிழ்நாடு
  காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
 5. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
 6. புதுக்கோட்டை
  உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
 7. தேனி
  தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
 8. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 9. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 10. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்