5 ஊராட்சிகளை இணைக்க கண்ணமங்கலம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
கண்ணமங்கலம் பேரூராட்சியுடன் 5 ஊராட்சிகளை இணைக்க வேண்டும் என பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
HIGHLIGHTS

கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற வளாகத்தில் பேரூராட்சித்தலைவர் மகாலட்சுமி கோவர்தனன் தலைமையில் மன்ற கூட்டம் நடைபெற்றது.
கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற வளாகத்தில் பேரூராட்சித்தலைவர் மகாலட்சுமி கோவர்தனன் தலைமையில் மன்ற கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் குமார் முன்னிலை வகித்தார். செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். இளநிலை உதவியாளர் வீரமணி தீர்மானங்களை வாசித்தார்.
கண்ணமங்கலத்தில் தீயணைப்பு மீட்பு நிலையம் அமைக்க அனுமதி அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர், கொளத்தூர், அழகு சேனை, அம்மாபாளையம், கொங்கராம்பட்டு ஆகிய 5 ஊராட்சிகளை கண்ணமங்கலம் பேரூராட்சியுடன் இணைத்து தேர்வுநிலை பேரூராட்சி ஆக மாற்ற அரசிடம் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உழவர் சந்தை நாகநதி மேம்பாலம் முதல் அம்மாபாளையம் கூட்ரோடு வரை சாலையின் இருபுறமும் கால்வாய் அமைத்தல், ஆலஞ்சி குளம் மொய்தீன் தெரு, புதுப்பேட்டை, காட்டுகாநல்லூர் சாலை சந்திப்பில் பயணியர் நிழற்குடை அமைத்திட அரசுக்கு கருத்துரு அனுப்புவதற்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.