/* */

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் 450 மனுக்களுக்கு தீர்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 450 மனுக்கள் பெறப்பட்டன.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் 450 மனுக்களுக்கு தீர்வு
X

திருவண்ணாமலை மாவட்ட குறை தீர்வு கூட்டத்தில் மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 450 மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூ ட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், பொதுமக்கள், முதியோா், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவ, மாணவிகளிடமிருந்து வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச மனைப் பட்டா, ஜாதி சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 450 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வெங்கடேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் குமரன், வருவாய் கோட்டாட்சியா்கள் தனலட்சுமி, மந்தாகினி மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மாற்று இடம் கேட்டு அம்பேத்கார் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மணலூர்பேட்டை ரோடு அம்பேத்கார் நகரை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறோம்.

திருவண்ணாமலை தாலுகா அலுவலக அதிகாரிகள் எங்களை வீடு காலி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து எங்கள் பகுதியில் உள்ள இரண்டு வீட்டை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து விட்டனர்.எங்களை காலி செய்யக்கோரி வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் நாங்கள் தங்குவதற்கு மாற்று இடம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பழங்குடியினர் மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் அளித்துள்ள மனுவில் தண்டராம்பட்டு அருகே உள்ள மலையனூர் செக்கடி ஆகிய பகுதிகளில் ஏராளமான மலை குறவர்கள் என்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு எட்டு ஆண்டுகளாக ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை சுமார் 300 மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மயான வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். உண்டு உறைவிட பள்ளி இப்பகுதியில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

இந்த வாரம் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தீக்குளிப்பு சம்பவங்கள் எதுவும் நடைபெறாததால் பாதுகாப்புக்கு இருந்த போலீசார் நிம்மதி அடைந்தனர்.அதேபோல் நொச்சிமலை கிராமத்தை சேர்ந்த ஒன்பது குடும்பத்தினர் அளித்துள்ள மனுவில் நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். எங்கள் வீட்டின் அருகே ஏரி கால்வாய் உள்ளது. எங்களது வீட்டை அகற்றக்கோரி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். நாங்கள் குடியிருக்கும் பகுதி நீர் பிடிப்பு பகுதியோ அல்லது நீர் வழி பாதையோ கிடையாது. எனவே அதிகாரிகள் நடவடிக்கையை கைவிட்டு பட்டா வழங்க வேண்டும் அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

Updated On: 4 Oct 2022 2:18 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்