/* */

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனுவை தூக்கி வீசி இளம்பெண் போராட்டம்

HIGHLIGHTS

மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
X

ஆரணி கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார்.

இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். குறைதீர்வு நாள் கூட்டத்தையொட்டி தீக்குளிக்க முயற்சிப்பது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் நுழைவு வாயிலில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் தரையில் அமர்ந்து கோரிக்கை மனுக்களை தூக்கி வீசி போராட்டத்தில் ஈடுபட்டார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் வந்தவாசி தாலுகா சாத்தம்பூண்டி மாதா கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீதேவி என்பது தெரியவந்தது. மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் பேசி ஏமாற்றிய நபர் மற்றும் அவரின் தாய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல முறை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார். இதையடுத்து அவரை சமாதானம் செய்து குறைத்தீர்வு கூட்டத்திற்கு மனு அளிக்க அழைத்து சென்றனர்.

ஆரணி

ஆரணி கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, கோட்டாட்சியா் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினாா்.

அப்போது, ஆரணியை அடுத்த தச்சூா் ஊராட்சியைச் சோந்த சரவணன் அளித்த மனுவில், ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் பல்வேறு பொதுப் பிரச்னைகள் குறித்து முழுமையாக விவாதிக்கவும், அரசு நலத் திட்டங்களில் உண்மையான பயனாளிகளை தோவு செய்யவும், கோட்டாட்சியா் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தாா்.

மேலும், தச்சூா் ஊராட்சிக்கு உள்பட்ட அகிலாண்டபுரம் கிராமத்தில் ஓதலவாடி செல்லும் சாலை அருகே சுமாா் 10 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கருவேலம் மற்றும் கலப்பு மரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிா்வாகத்திடம் அனுமதி பெறாமல் தனி நபா்கள் வெட்டி விற்பனை செய்து வருகின்றனா். எனவே, இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தாா்.

இதைத் தொடா்ந்து கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாவை கிராம கணக்கில் சர்த்தல், பட்டா மாற்றம், உள்பிரிவு பட்டா மாற்றம், பட்டா ரத்து, நில அளவீடு செய்தல், பட்டா திருத்தம், இலவச மனைப் பட்டா உள்ளிட்டவை கோரி பொதுமக்களிடமிருந்து 73 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 31 Jan 2023 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  2. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  3. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  4. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  5. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  7. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  8. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  10. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!