பாமக சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம்.

Bjp Tamil - தொமுசவின் அராஜகப் போக்கைக் கண்டித்தும், பணிமனை கிளை மேலாளருக்கு எதிராகவும், பாமக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
Bjp Tamil | People
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்

Bjp Tamil- திருவண்ணாமலை தேனிமலை அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை-2 எதிரே நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பாமகவின் தெற்கு மாவட்டச் செயலாளர் ஏந்தல் பக்தவச்சலம் தலைமை வகித்தாா்.

மேற்கு மாவட்டத் தலைவா் பரமசிவம், பாமக மாநில நிா்வாகிகள் சிவக்குமாா், நந்தகோபால், சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாட்டாளி தொழிற்சங்கத்தின் மண்டல பொதுச் செயலாளர் சம்பத் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளர்களாக சிவக்குமார் எம்.எல்.ஏ., பாட்டாளி தொழிற்சங்க மாநில தலைவர் நந்தகோபால், மாநில பொதுச் செயலாளர் ராம.முத்துக்குமார், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆா்ப்பாட்டத்தில், விடுப்பு அனுமதித்தல், ரூட் போஸ்டிங் போன்றவற்றில் தொழிலாளர் விரோத பாகுபாடான நடவடிக்கையை கைவிடக் கோரி கோஷங்கள் எழுப்பினர். மேலும் நிறுத்தப்பட்டா சந்தாவை உடனே மாற்ற வேண்டும். தொழிலாளா் விரோதப் போக்கு நடவடிக்கையை கைவிட வேண்டும். நீக்கப்பட்ட பாட்டாளி தொழிற்சங்க நிா்வாகிகளை மீண்டும் அதே இடத்தில் பணியமா்த்த வேண்டும். பாட்டாளி தொழிற்சங்க நிா்வாகிகளை தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், பாட்டாளி தொழிற்சங்கத்தின் மாநில இணைத் தலைவா் ரா.வீரமணி, இணைச் செயலாளர் வடிவேல், இணைப் பொருளாளா் சேகா், மண்டலத் தலைவா் பாபு, மண்டல பொருளாளர் காண்டீபன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் நாராயணசாமி, ஏழுமலை, மாவட்ட தலைவர்கள் பெரியசாமி, ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மத்திய சங்க துணைச் செயலாளர் சுந்தரேசன் நன்றி கூறினார்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2023-01-25T12:04:05+05:30

Related News