/* */

திருவண்ணாமலை அருகே ஏடிஎம்-ஐ உடைத்த நபர் நான்கு மணி நேரத்திற்குள் கைது

வெறையூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே ஏடிஎம்-ஐ உடைத்த நபர் நான்கு மணி நேரத்திற்குள் கைது
X

ஏடிஎம்மில் திருட முயன்ற நபரை கைது செய்த காவல்துறையினர்.

திருவண்ணாமலை மாவட்டம் அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் உடைக்கப்பட்டு இருப்பதாக அருணை பொறியியல் கல்லூரி இந்தியன் வங்கி கிளை மேளாலர் வெறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவின்படி, திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை மேற்பார்வையில், வெறையூர் வட்ட காவல் ஆய்வாளர் அழகுராணி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு அருகில் இருந்த CCTV கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டனர்.

வேட்டவலம் ரோடு, விஜயாமால் எதிரே மறைந்து இருந்த திருவண்ணாமலை வட்டம், தென்மாத்தூர் கிராமத்தை சேரந்த உபேந்திரன் என்பரை கைது செய்து விசாரனை செய்தனர். அருணை பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள இந்தியன் வங்கியில் கடன் கேட்டதாகவும் அதனை வங்கி தரப்பில் தரமறுத்ததாகவும், மேலும் அவருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால் அருணை பொறியியல் கல்லூரியில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்-ஐ இரவு சுமார் 01.00 மணியளவில் கடப்பாறை, கொடுவா மற்றும் திருப்புளி கொண்டு ஏடிஎம்-ல் இருந்த CCTV கேமராக்களை சேதப்படுத்திவிட்டு, பின்னர் ஏடிஎம்-யை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார். அப்போது பணம் இருந்த பெட்டியை உடைக்க முடியாதபோது பின்னர் அங்கே யாரோ ஒருவர் வருவது போல் இருந்ததால் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டதாக தெரிவித்தார். இவரை குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

Updated On: 31 May 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!