/* */

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

  • Grievance Committee- திருவண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 490 மனுக்கள் பெறப்பட்டன. இரு பெண்கள் தீக்குளிக்க முயற்சித்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
X

மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர்.

Grievance Committee- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாதி சான்றிதழ், வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் உபகரணங்கள், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நீண்ட வரிசையில் நின்று அளித்தனர். இதில் 490-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை கலெக்டர் வெங்கடேசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம், வருவாய் கோட்டாட்சியர்கள் வெற்றிவேல், தனலட்சுமி மற்றும் பல்வேற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தீக்குளிக்க முயற்சி:

ஒவ்வொரு வாரமும் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெறும் போது ஒருவர் அல்லது இருவர் , தீக்குளிக்க முயற்சி செய்வது வழக்கமாகிவிட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும் கோரிக்கை மனு அளிக்க வருபவர்கள், ஒருவர் அல்லது இருவர் இந்த செயலில் ஈடுபடுகின்றனர்.

நேற்று நடைபெற்ற மக்கள் குறிப்பு கூட்டத்தில் இருவர் தீக்குளிக்க முயன்றனர் அவர்களை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

திருவண்ணாமலை தாலுகா பள்ளிக்கொண்டாப்பட்டு பகுதியில் உள்ள காட்டு நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி விஜயலட்சுமி (வயது 34) என்பவர் 100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனை மறைத்து வந்திருந்தார். இந்த நிலையில் அவர் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து அவர் மீது தண்ணீர் ஊற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், பணிதள பொறுப்பாளராக பணியாற்றி வரும் என்னை அதே ஊரை சேர்ந்த துணைத் தலைவர் என்பவர் பணியில் இருந்து நீக்கி விடுவோம் என்று மிரட்டி வருகிறார். இதனால் மனவேதனையில் தற்கொலைக்கு முயன்றேன்' என்றார். அவரை போலீசார் திருவண்ணாமலைக்கு கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

திருடு போன பன்றிகள் கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்:

அதேபோல் ஆரணி டவுன் கைலாசநாதர் கோவில் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்த குமரேசன் மனைவி லீலா (48) என்பவர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திடீரென மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றி விட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது, லீலாவின் கணவர் அவரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். அவரது மகள் செய்யாறு பெண்கள் காப்பகத்தில் உள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக பன்றிகளை வளர்த்து வருகிறார். இவரிடம் இருந்து 50 பன்றிகள் திருடு போனதாகவும், திருடு போன பன்றிகள் கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அவரையும் போலீசார் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று உள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 9:40 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  3. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  6. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  7. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  9. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்