/* */

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்: 627 மனுக்கள், பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்

Public Grievance -குறைதீர்வு கூட்டத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை மனுக்களை பெற மொழிபெயர்ப்பாளர் நியமனம்.

HIGHLIGHTS

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்:  627 மனுக்கள், பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்
X

மாற்றுத்திறனாளி கூறும் செய்தியை மொழிபெயர்ப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு விளக்குகிறார்.

Public Grievance -திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். அதில் கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 627 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார். நிலுவையில் உள்ள மனுக்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.

குறைதீர்வு நாள் கூட்டத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பெற வசதியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சிறப்பு மொழி வேட்பாளரை நியமனம் செய்து , அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்யும் விதமாக மொழிபெயர்ப்பாளர் நியமித்ததை மாற்றுத்திறனாளிகள் பாராட்டி வரவேற்றனர். மாவட்ட ஆட்சியருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித் தாசில்தார் வெங்கடேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முக சுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குமரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் வெற்றிவேல், கவிதா, வினோத்குமார் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Jun 2022 11:43 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?