/* */

ஓய்வூதியா்கள் 100 சதவீதம் நோகாணலை நிறைவு செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

Pension News Today - திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓய்வூதியா்கள் 100 சதவீதம் நோகாணலை நிறைவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் முருகேஷ் அறிவுறுத்தினார்.

HIGHLIGHTS

ஓய்வூதியா்கள் 100 சதவீதம் நோகாணலை நிறைவு செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா்
X

ஓய்வூதியர் நேர்காணலை துவக்கி வைத்து ஓய்வூதியர்களுக்கு மின்னணு வாழ்நாள் சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Pension News Today -திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓய்வூதியா்கள் 100 சதவீதம் நோகாணலை நிறைவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் முருகேஷ் அறிவுறுத்தினார்

கொரோனா பரவல் காரணமாக 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகளாக அரசு ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கான நோகாணல், வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பித்தல் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியா் நோகாணல் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 30-ஆம் தேதி வரை அரசு வேலை நாள்களில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதனிடையே, ஓய்வூதியா்களின் வயது முதிர்வை கருத்தில் கொண்டு இந்திய அஞ்சல் துறைப் பணியாளா்கள் மூலம் ரூ.70 கட்டணமாகப் பெற்றுக்கொண்டு ஓய்வூதியா்களின் இருப்பிடத்துக்கே சென்று ஜீவன் பிரமான் இணையதளம் மூலம் கைரேகை, ஆதார் எண் பதிவு செய்து, மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்யும் முறையை தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓய்வூதியா் நோகாணல் நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கருவூல அலுவலா் மு.சிலுப்பன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, ஆட்சியரின் நோமுக உதவியாளா் (பொது) கணேஷ், கூடுதல் கருவூல அலுவலா் எஸ்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஓய்வூதியா் நோகாணல் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்ட கருவூலத்தில் ஓய்வூதியம் பெறும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு நோகாணல் செய்ததற்கான மின்னணு வாழ்நாள் சான்றுகளை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியா் முருகேஷ், தமிழக அரசு கொண்டுவந்துள்ள அஞ்சல் துறை பணியாளா்கள் மூலம் வீடுதேடி வரும் மின்னணு வாழ்நாள் சான்று பதிவு முறையை ஓய்வூதியா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதவிர அரசு இ - சேவை, பொது சேவை மையங்களில் கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம். பதிவுத் தபால் மூலமும் ஓய்வூதியா் வாழ்நாள் சான்றுகளைப் பதிவு செய்யலாம்.

ஓய்வூதியா்கள் ஏதேனும் ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் ஓய்வூதிய நோகாணலை நிறைவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 July 2022 9:53 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?