திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஊராட்சி தலைவர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஊராட்சி தலைவர்
X

தீக்குளிக்க முயற்சித்த ஊராட்சி மன்ற தலைவரிடம் இருந்து பெட்ரோல் கேனை  போலீசார் பிடுங்கி எரிந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட சிறுவள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, இன்று பெட்ரோல் கேனுடன் வந்திருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட சிறுவள்ளூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர் இன்று திருவண்ணாமலை மாவட்ட அலுவலகத்திற்கு வந்தார். திடீரென தான் வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் துறையினர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலையிடம் இருந்த பெட்ரோல் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

பின்னர் அவரை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் தெரிவிக்கையில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவள்ளூர் ஊராட்சியில் 4500 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த கிராமத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக அண்ணாமலை ஆகிய நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவராக வெற்றி பெற்றுள்ளேன். ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக கீதா சுரேஷ் உள்ளார். இங்கு மொத்தம் ஒன்பது வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

கடந்த மூன்று வருடங்களாக ஊராட்சி மன்ற செயலாளர் ஆக பணியாற்றி வரும் நாராயணன் என்பவர் ஊராட்சிக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை செய்யவிடாமல் கிராமத்திற்கு வரும் திட்டங்களை செயல்படுத்த விடாமல் ஊராட்சி மன்ற தலைவரையும் , ஊராட்சி மன்ற துணைத் தலைவரையும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களையும் மதிக்காமலும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வராமலும் அராஜக செயலில் ஈடுபட்டு வருகிறார்.

ஊராட்சி செயலாளர் நாராயணன் என்பவர் அதே ஊராட்சியில் 18 வருடங்களாக ஊராட்சி மன்ற செயலாளராக பணியாற்றி வருவதால் அராஜக போக்கில் சர்வாதிகாரி போல் ஈடுபட்டு வருகிறார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து வேறு ஊராட்சிக்கு மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் , மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஆகியோருக்கு இதுவரையில் 40 முறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று தன் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததாக தெரிவித்தார்.

நான் அளித்த மனுக்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நான் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள போகிறேன் ஏன் என்னை தடுக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

போலீசார் அவரிடத்தில் மனுவை பெற்றுக் கொண்டு அவரை அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 25 Jan 2023 9:36 AM GMT

Related News