/* */

சாலையில் நடுவே புதிய மின்விளக்குகள்: அமைச்சர் எ.வ வேலு தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் சாலையில் நடுவே அமைக்கப்பட்ட புதிய மின்விளக்குகளை அமைச்சர் எ.வ வேலு தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

சாலையில் நடுவே புதிய மின்விளக்குகள்: அமைச்சர் எ.வ வேலு தொடங்கி வைத்தார்
X

அமைச்சர் எ.வ.வேலு புதிய மின்விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை காந்தி நகர் பழைய பைபாஸ் சாலையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் சாலையின் நடுவில் 16 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு 36 மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது.

இதன் தொடக்க விழா நேற்று இரவு காந்திநகர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள விநாயகர் கோவில் அருகில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில தடகள சங்க துணைத்தலைவர் கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு புதிய மின்விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகரமன்ற துணைத்தலைவர் ராஜாங்கம், நகரமன்ற உறுப்பினர் பொறியாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 April 2022 12:53 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  2. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  4. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  5. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  6. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  7. நாமக்கல்
    நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தயார் நிலையில் 1,628 வாக்குச்சாவடிகள்
  8. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  9. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  10. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...