திருவண்ணாமலையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும், எம்ஜிஆர் பிறந்தநாள் விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு, அதிமுக  மாவட்ட செயலாளரும் போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை காந்தி சிலை அருகே நடந்த நிகழ்வில், நகர அதிமுக சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளரும் போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில், அதிமுக நகர செயலாளர் ஜே செல்வம், நகர மன்ற முன்னாள் உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். கலசப்பாக்கம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையிலும், ஆரணியில் சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையிலும் , எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 2022-01-17T13:14:31+05:30

Related News