திருவண்ணாமலையில் பாஜகவின் புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம்

திருவண்ணாமலை பாஜகவின் புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் மாநில பொது செயலாளர் பங்கேற்றார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலையில் பாஜகவின் புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம்
X

புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம் வேங்கிக்காலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி ஏற்புரையாற்றினார். மாவட்ட பார்வையாளர் வி.தசரதன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வேலூர் பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில பொது செயலாளருமான பி.கார்த்தியாயினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய மாவட்ட தலைவரை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

புதிதாக தேர்வு செய்யப்பட்டு உள்ள மாவட்ட தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வரை தூங்காமல் பணியாற்ற வேண்டுமென மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .

அயராமல் பணியாற்றி எதிரிகளை சமாளித்து எதிர்க்கும் தளபதிகளாக தொண்டர்களை மாற்ற வேண்டும். அனைவரையும் சகோதர சகோதரிகளாக கருதி வழி நடத்த வேண்டும். பாரதிய ஜனதா கட்சி மக்களை ஆள வேண்டும் என்பதற்காக உருவானது அல்ல, மக்களுக்கு அநீதிகள் நேரும் போதும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காத போதும் மக்களுக்கான முதல் குரல் கொடுப்பது பாரதிய ஜனதா மட்டும்தான்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

உங்களுடைய முழு கவனமும் கிளை பூத் அமைப்பது, மண்டலங்களை முழுமையான மண்டலங்களாக மாற்றுவது என்பதில் முழுமையாக செயல்பட வேண்டும். எதிரிகளை எதிர்கின்ற, சவால்களை சமாளிக்கின்ற ஒவ்வொரு காரிய கர்த்தாக்களையும் போர் தளபதியாக மாற்ற வேண்டியது தான் உங்களின் தலையாய கடமை என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதியும் வென்றெடுப்போம். அதற்கான களப்பணிகளில் அனைவரும் திறம்பட பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் பேசுகையில் பாரதிய ஜனதா தலைமை என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றுவேன். உயிர் உள்ளவரை கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் சுமார் 1200 பூத்கள் உள்ளது.

விரைவில் அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டிகள் அமைக்கப்படும், திருவண்ணாமலையில் பாஜக மாநாடு நடத்தப்படும் என தெரிவித்தார்.

இதில் மாநில ஆன்மிக பிரிவு துணைத்தலைவர் சங்கர், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செந்தில், கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன், தண்டராம்பட்டு தி.அறவாழி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் பி.சந்தோஷ்பரமசிவம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் டி.ஆர். கிஷோர்குமார், உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Nov 2022 1:51 AM GMT

Related News

Latest News

 1. உலகம்
  கொலம்பியா நிலச்சரிவு: உயிரிழந்த 34 பேரில் எட்டு சிறுவர்கள்
 2. தென்காசி
  தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருகை: பாதுகாப்பு குறித்து தென்மண்டல...
 3. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 4. திருவில்லிபுத்தூர்
  தொடர் மழை: சதுரகிரிமலை சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல...
 5. தொழில்நுட்பம்
  எலோன் மஸ்க் பயன்படுத்தவுள்ள நியூராலிங்க் தொழில்நுட்பம் என்றால்
 6. விளையாட்டு
  உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்
 7. திருவண்ணாமலை
  கார்த்திகைத் தீபத் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார்...
 8. திருவண்ணாமலை
  அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
 9. இந்தியா
  சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு.. தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்கள்...
 10. தூத்துக்குடி
  தூத்துக்குடி மாவட்டத்தில் பாலித்தீன் பைகளில் உணவுப் பொருட்களை...