வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?.

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?.
X

பைல் படம்.

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை (வயது) முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் க்செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2022-23 -ம் ஆண்டிற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1.1.2022 -ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.

தாலுகா அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று மற்றும் தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இதற்கான விண்ணப்பப்படிவங்களை நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு மாதம் தோறும் உதவித்தொகையாக ரூ.3,500, மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும்.

நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 19 March 2023 12:55 AM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 2. திருவள்ளூர்
  பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்
 3. நாமக்கல்
  நாமக்கல்லில் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் வேளாண்...
 4. கும்மிடிப்பூண்டி
  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட கோரிக்கை
 5. நாமக்கல்
  நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து
 6. திருவண்ணாமலை
  கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
 7. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
 8. திருவண்ணாமலை
  நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
 9. நாமக்கல்
  மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
 10. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை