/* */

கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம்

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம்
X

கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம் மண்டல இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மண்டலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம் திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் உள்ள யாத்ரி நிவாஸ் கூட்டரங்களில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பணியாளர்கள் பேசினர். மேலும் அவர்கள் மனுக்களும் வழங்கினர்.

தொடர்ந்து இணை ஆணையர், பணியாளர்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு கண்டு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தார். மேலும் அவர் பேசுகையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் அரசு சார்பில் அகற்றப்பட்டு வருகிறது.

கோவில் பணியாளர்கள் கோவிலின் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்று கண்டறிந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும் என்றார். தொடர்ந்து கூட்டத்தில் பணிபதிவேடு பராமரிக்கப்படும் விவரம், பணியாளர் சம்பளப்பட்டியல் அங்கீகரிப்பட்டு உள்ள விவரம், 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள விவரம், காலிப்பணியிடங்கள் நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Updated On: 31 July 2022 11:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி