/* */

பவுர்ணமி முடிந்தும் அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

அண்ணாமலையார் கோயிலில், சித்ரா பவுர்ணமி முடிந்த பிறகும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

HIGHLIGHTS

பவுர்ணமி முடிந்தும் அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
X

கிரிவலப்பாதை முழுவதும்  ஒட்டுமொத்த தூய்மை பணி  மேற்கொண்ட தூய்மை பணியாளர்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 4 மணி நேரம் வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதில் சித்ரா பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி கடந்த 4-ந்தேதி நள்ளிரவு 11.58 மணி அளவில் தொடங்கி நேற்று முன்தினம் நள்ளிரவு 11.33 மணி அளவில் நிறைவடைந்தது.

இரண்டு நாட்களாக திருவண்ணாமலை பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சித்ரா பவுர்ணமி முடிந்து, வெளியூர் திரும்பிய பக்தர்களால் நேற்றும் ரயிலில் கூட்டம் அலைமோதியது. சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை நேற்று அதிகாலையில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. எனவே, பஸ்களிலும் கூட்டம் நிரம்பியிருந்தது.

இந்நிலையில், சித்ரா பவுர்ணமி முடிந்த பிறகும், அண்ணாலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகரித்தே காணப்பட்டது. சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் வெளியூர் பக்தர்களின் வருகை தொடர்கிறது. பக்தர்கள் கட்டணம் மற்றும் பொது தரிசனம் வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசனம் வழியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேல் ஆனதாக தெரிவித்தனர்.

போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் கூடுதலாக செய்யப்பட்டிருந்தது. மேலும், பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்திருப்பதால், இன்று வரை சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதை முழுவதும் நேற்று ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. நேற்று மட்டும் சுமார் 140 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

அண்ணாமலையார் கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை மாட வீதிகளில் நிறுத்தி விட்டு சென்றதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.

மாட வீதிகளை கடந்து செல்வதற்கு பொதுமக்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது இதனால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் காத்திருந்தன. போக்குவரத்து போலீசார் உடனடியாக சரி செய்து வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை நேற்று இன்றும் தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 7 May 2023 1:14 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி
  8. மாதவரம்
    குடிநீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
  9. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 1,260 மூட்டை பருத்தி ரூ. 30 லட்சம்...
  10. கலசப்பாக்கம்
    பருவத மலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்