/* */

ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி மின் ஊழியா்கள் சாலை மறியல்

ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி மின்ஊழியர் மத்திய அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி மின் ஊழியா்கள் சாலை மறியல்
X

போராட்டத்தில் ஈடுபட்ட மின் ஊழியா்கள்.

ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி மின்ஊழியர் மத்திய அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் எதிரே சி.ஐ.டி.யு. மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மாநில செயலாளர் காங்கேயன் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர்கள் அருள்தாஸ், மாரிமுத்து, ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பாரி, மண்டல செயலாளர் சிவராஜ், வட்டச் செயலாளர் பாலாஜி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்து பேசினர்.

அப்போது தானே, வர்தா, கஜா, ஒக்கி, புயல் பாதிப்பின் போது இரவு பகலாக பணிபுரிந்து மின்சார வாரியத்தை தலை நிமிர வைத்த ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

10 ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்வோம் என்ற தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

அரசும், வாரியமும் அறிவித்தபடி தினக்கூலி ரூ.380 அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்கி உடனடியாக பணி நிரந்தம் செய்ய வேண்டும்.

ஊதிய உயர்வு, வேலைப்பளு பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேசி தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில், 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். இந்தப் போராட்டத்தால் திருவண்ணாமலை-வேலூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா்கைது செய்தனா்.

Updated On: 17 Feb 2023 1:26 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவத மலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்
  2. நாமக்கல்
    முட்டை விலை 30 பைசா சரிவு; கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சி
  3. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  4. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  5. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  6. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  10. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!