/* */

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.94 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகள்

திருவண்ணாமலையில் 80 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.2.94 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகளுக்கு  ரூ.2.94 லட்சத்தில்  பல்வேறு நலத் திட்ட உதவிகள்
X

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கிய கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 80 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.94 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி முதல் கடந்த 8-ந்தேதி வரை நடைபெற்ற 18 ஊராட்சி ஒன்றியங்கள் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளுடன் கூடிய மருத்துவ முகாமில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு உட்பட்ட 775 நபர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட 1,364 நபர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் 1,769 நபர்களுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையும், 1,847 நபர்களுக்கு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கான இணையதள பதிவுகள் நடத்தப்பட்டன. முகாமில் உதவி உபகரணங்களுக்காக கண்டறியப்பட்ட 282 நபர்களில் அலிம்கோ நிறுவனத்தினால் 120 நபர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்க அளவுகள் மேற்கொள்ளப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கலந்துகொண்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், முடநீக்கு சக்கர நாற்காலி 10 பேருக்கும், நடைபயிற்சி வண்டி 12 பேருக்கும், மூன்று சக்கர சைக்கிள் 4 பேருக்கும், காதொலிக்கருவி 34 பேருக்கும், ஊன்றுகோல் 15 பேருக்கும், கார்னர் சேர்கள் 5 பேருக்கும் என 80 பேருக்கு ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 950 மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி தலைமை வகித்தாா். உதவி ஆட்சியா் (பயிற்சி) ரஷ்மி ராணி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வெங்கடேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தங்கமணி மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Updated On: 14 March 2023 1:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி