/* */

பயிர் சேத விவரங்களை தெரிவிக்க விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பயிர் சேதவிவரங்களை விவசாயிகள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

HIGHLIGHTS

பயிர் சேத விவரங்களை தெரிவிக்க விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
X

மாதிரி படம் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிப்புக்குள்ளான பயிர் சேத விவரங்களை விவசாயிகள் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார் இதற்கான பணியில் வருவாய் வேளாண்மைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஏரி, குளங்கள், பாசனக் கிணறுகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை கணக்கிடும் பணியில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பயிர் சேத விவரங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகளிடம் விவசாயிகள் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் தெரிவிக்கும் பயிர் சேத விபரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு அதிகாரிகள் குழுவால் நேரடி களஆய்வு செய்யப்பட்டு, அதன்மூலம் விளை நிலங்களில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தை வெளியேற்றவும், பாதிப்புக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 11 Nov 2021 11:47 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  4. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  5. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  6. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  7. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  8. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  9. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்