வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசு முதன்மை செயலாளருமான தீரஜ்குமார் கேட்டுக்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசு முதன்மை செயலாளருமான தீரஜ்குமார் பங்கேற்று மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கி பேசினார். மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை மூலம் பாதுகாப்பு மையங்களை அமைக்க வேண்டும். கீழே விழுந்த மரங்களை உடனே அகற்ற வேண்டும். பாதுகாப்பு மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மின்சார வாரியம் சார்பில் இடிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களை கண்டறிந்து உடனே அகற்றி சரி செய்ய வேண்டும். கீழே விழுந்த மின் கம்பிகளை உடனே அகற்ற வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் ஏரிகள் அணைகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.

மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து எந்தவித பாதிப்பும் ஏற்படாதவண்ணம் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வில் அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Oct 2021 7:21 AM GMT

Related News

Latest News

 1. உதகமண்டலம்
  இல்லம் தேடி கல்வி திட்டம்: உதகை கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
 2. இராமநாதபுரம்
  இராமநாதபுரத்தில் மின் உற்பத்தி செயல்பாடுகளை சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு ...
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் கேந்திர வித்யாலயா, இசைப்பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு
 4. அந்தியூர்
  நிரம்பி வழியும் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையினை பார்வையிட்ட எம்எல்ஏ
 5. பெரம்பலூர்
  பெரம்பலூரில் பால் உற்பத்தியாளர்கள் நிலுவை பணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
 6. ராதாபுரம்
  பணகுடி அருகே வனப்பகுதியில் யானை மர்மச்சாவு: வனத்துறையினர் விசாரணை
 7. திருநெல்வேலி
  மானூர் ஒன்றிய சேர்மேனாக 22 வயது பொறியியல் பட்டதாரி ஸ்ரீலேகா தேர்வு
 8. பவானிசாகர்
  திம்பம் மலைப்பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
 9. கவுண்டம்பாளையம்
  3 மாத குழந்தையை கொலை செய்த பாட்டி: போலீஸ் விசாரணை
 10. பெரம்பலூர்
  பெரம்பலூர் கணபதி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு