/* */

தீபத்திருவிழா: கோயிலில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

தீபத்திருவிழா: கோயிலில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்
X

தீபத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் காவல்கண்காணிப்பாளர் பவுன்குமார், கோவிலின் இணை ஆணையர் அசோக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்கள் அனுமதி இல்லாததால் மற்ற நாட்களில் 13 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், ஐந்தாம் பிரகாரத்தில் சாமி உலா வரும் பாதையை மற்றும் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் சன்னதியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தனர். தீபதிருவிழாவில் பக்தர்கள் எவ்வித சிரமுமின்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கூறுகையில், இந்தாண்டு தீபத் திருவிழா 7 ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காரணமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணாமலையார் கோவிலில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்தபின் அனுமதி சீட்டுடன் வந்தால் தான் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு உள்ளூர் பக்தர்களுக்கு 3 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் நேரடியாக அனுமதி சீட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி கூடுதல் ஆணையர் அலுவலகம், அறநிலை துறை அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஞாயிறு கிழமை மற்றும் திங்கள் கிழமைகளில் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அனுமதி சீட்டை கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்காத நாட்களைத் தவிர மீதமுள்ள நாட்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

சிறப்பு பேருந்து, இரயில், அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு இந்த ஆண்டு அனுமதி இல்லை. கிரிவல பாதையை ஆய்வு செய்ததில், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும் இந்த ஆண்டு தீபத்திருவிழா கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் சிறப்பாக நடைபெறும் என மேலும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுவார்கள் என்றும். சுவாமி ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வரும்போது உபயதாரர்கள் கட்டளைதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட காவல் காவல்கண்காணிப்பாளர் பவுன்குமார் தெரிவித்தார்.

அதே போன்று கிரிவலம் மேற்கொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 17 முதல் 19 தேதி வரை புறவழிச்சாலையில் முகாம் அமைத்து வெளியூர் பக்தர்கள் கண்காணிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

10ஆம் தேதி முதல் மணலூர்பேட்டை சாலை, பெங்களூரு சாலை அத்தியந்தல், வேலூர் சாலை ஈசானிய லிங்கம், திண்டிவனம் சாலையில் போன்ற இடங்களிலில் தற்காலிக சிறப்பு பேருந்து நிலையம் ஏற்படுத்தப்படும் என்றும் தீபத் தினத்தன்று பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

Updated On: 6 Nov 2021 1:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  3. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  4. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  5. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  6. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  7. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  9. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  10. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!