/* */

அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து உறுதி செய் யும் நிகழ்ச்சியை ஆட்சியர் தொடக்கம்

வேங்கிக்கால் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதிசெய் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்

HIGHLIGHTS

அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து உறுதி செய் யும் நிகழ்ச்சியை ஆட்சியர் தொடக்கம்
X

 அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதிசெய் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தமிழக முதல்- அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் புதூர் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் நிகழ்ச்சியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2127 குழந்தைகள் மையங்கள் உள்ளன. இதில் உள்ள 1,43,455 குழந்தைகளில் 40,573 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இக்குழந்தைகளை மருத்துவ குழுவின் மூலம் முழுவதுமாக பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த திட்டத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இக்குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இத்திட்டத்தின் மூலம் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவ முகாம் 30 நாட்களுக்கு 593 இடங்களில் குழந்தைகளின் வீடுகளுக்கு அருகில் நடக்கிறது. விடுபட்ட குழந்தைகள் அனைத்தும் இறுதி வாரத்தில் முகாமில் கலந்து கொள்ளலாம். எனவே பொதுமக்கள் தங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை உறுதி செய்யும் வகையில் 6 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமானவர்களாக உருவாக்க இம்முகாமினை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் திட்ட அலுவலர் கந்தன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செல்வக்குமார், திருவண்ணாமலை கிராமப்புறம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஆண்டாள், வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 May 2022 7:32 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்