/* */

காலை 11 மணி வரை திறக்கப்படாமல் இருந்த வட்ட வழங்கல் அலுவலகம்

திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

காலை 11 மணி வரை திறக்கப்படாமல் இருந்த  வட்ட வழங்கல் அலுவலகம்
X

வட்ட வழங்கல் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் காலை 11 மணி வரை திறக்கப்படாமல் இருந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் நடந்த பயிற்சி வகுப்பு ஒன்றில் கலந்து கொண்ட திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேலிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர், வட்ட வழங்கல் அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த வட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களிடம் சரியான நேரத்தில் அலுவலகத்தை திறக்க வேண்டும். முகாம் ஏதேனும் சென்று இருந்தால் அது குறித்து அலுவலகம் முன்பு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், என்றார்.

மேலும் ரேஷன் கார்டு பெற்று தருவதற்கு இடைதரகர்கள் சிலர் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். பின்னர் அவர் இடைதரகர்கள் யாரேனும் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Updated On: 13 May 2022 7:48 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  2. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  5. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  6. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  7. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  8. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  9. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  10. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...