/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா

Children Day Celebration -திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் ஆட்சியர் பங்கேற்று குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா
X

குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் மற்றும்  எஸ்பி கார்த்திகேயன் ,அதிகாரிகள் , குழந்தைகள்.

Children Day Celebration -குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சைடு லைன் , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மாவட்ட சமூக நலத்துறை இணைந்து நடத்திய நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர் முருகேஷுக்கு நண்பன் பட்டையை (சி.தோஸ்தி) குழந்தைகள் அணிவித்து கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், மாவட்ட டி ஆர் ஓ பிரியதர்ஷினி ,கூடுதல் ஆட்சியர் பிரதாப் சிங், அனாமிகா, பயிற்சி ஆட்சியர் ரக்ஷ்மி ராணி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி மற்றும் துறை அலுவலர்கள கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை எஸ் ஆர் ஜி டி எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் எல்கேஜி முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாறுவேட போட்டி, ஓவியப் போட்டி , பேச்சு போட்டி , கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் மருத்துவர் செந்தில்நாதன் பரிசுகளை வழங்கினார். முன்னதாக பள்ளியின் முதல்வர் மேகலா வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் சண்முகம் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் , பெற்றோர்கள் , ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஆரணி: தேவிகாபுரம் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சரவணன் தலைமை வகித்தாா்.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சரோஜினி செல்வம், எஸ்எம்சி உறுப்பினா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவித் தலைமை ஆசிரியை மேகலா வரவேற்றாா்.சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி. வெங்கிடேசன் கலந்து கொண்டு பேச்சுப் போட்டி, கவிதை, ஓவியம், மாறுவேடம் என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினாா். மேலும் மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு பேரூராட்சி துணைத் தலைவர் திலகவதி தலைமையில் குழந்தைகள் தின விழா சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேத்துப்பட்டு பேரூராட்சி துணைத் தலைவர்திலகவதி செல்வராஜன் , செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். திவ்யா கல்வி குழுமத்தின் தாளாளர் செல்வராஜ் , பள்ளியின் முதல்வர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மாறுவேட போட்டி பேச்சுப்போட்டி கவிதை கட்டுரை போட்டிகள் நடைபெற்றது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கேடயங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 Nov 2022 9:48 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?