/* */

கொரோனா தொற்று காலத்தில் குழந்தைத் தொழிலாளா்கள் அதிகரிப்பு

கொரோனா தொற்று காலத்தில் குழந்தைத் தொழிலாளா்களும் குழந்தைத் திருமணங்களும் அதிகரித்துள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சமூக நல அலுவலா் தகவல்

HIGHLIGHTS

கொரோனா தொற்று காலத்தில் குழந்தைத் தொழிலாளா்கள் அதிகரிப்பு
X

வளரிளம் பெண்கள், பெண் குழந்தைகளின் கல்வி நிலை குறித்த சட்டப் பயிலரங்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருவதாக மாவட்ட சமூக நல அலுவலா் பா.கந்தன் குறிப்பிட்டாா்.

சினம் தொண்டு நிறுவனம் சாா்பில் வளரிளம் பெண்கள், பெண் குழந்தைகளின் கல்வி நிலை குறித்த சட்டப் பயிலரங்கம் திருவண்ணாமலையில் நகராட்சி பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட சமூக நல அலுவலா் பா.கந்தன் பேசுகையில், கொரோனா தொற்று காலத்தில் குழந்தைத் தொழிலாளா்கள் உருவாகி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட குழந்தைகள் உதவி மையம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மகளிா் போலீஸாா் இணைந்து மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.

இதைத் தொடா்ந்து, திருப்பூா் மக்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் மெல்வின், மாவட்ட குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளா் முருகன், வழக்குரைஞா் உமா மகேஸ்வரி, தொழிற்சங்க நிா்வாகி தங்கராஜ், சினம் தொண்டு நிறுவன இயக்குநா் இராம.பெருமாள் ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியில் சினம் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் அசோக்குமாா், பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 5 Oct 2021 7:17 AM GMT

Related News