முதல்வர் 70 ஆண்டு கால பொது வாழ்வு புகைப்பட கண்காட்சி நிறைவு

திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலினின் 70 ஆண்டு கால பொது வாழ்வு புகைப்பட கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
முதல்வர் 70 ஆண்டு கால பொது வாழ்வு புகைப்பட கண்காட்சி நிறைவு
X

நிறைவு விழாவில் எ.வ.வே.கம்பன் மற்றும் திமுக நிர்வாகிகள்

திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் 70 ஆண்டு கால பொது வாழ்வு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது . இந்த புகைப்பட கண்காட்சியினை திருவண்ணாமலை தூய்மை அருணை சார்பில் கடந்த 11ஆம் தேதி அன்று அமைச்சர் வேலூர் தலைமையில் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி திறந்து வைத்தார்.

முதல்வர் ஸ்டாலினின் எழுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பொது வாழ்வு வரலாற்று பயண புகைப்பட கண்காட்சி சென்னையில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை காந்திநகர் மைதானத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பிரம்மாண்ட அரங்கத்தில் தொடங்கப்பட்டு இதுவரை 75 ஆயிரம் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மாணவர்கள் பார்வையிட்டு ரசித்துள்ளனர் . முதல்வர் சைக்கிள் ஓட்டும் சிலை, சிறை சாலையில் முதல்வர் இருந்த காட்சி ஆகிய இடங்களில் பொதுமக்கள் செல்பி எடுத்துச் சென்றனர்.

கடந்த 11 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த வரலாற்று புகைப்பட கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.இதை ஒட்டி நடைபெற்ற நிறைவு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்முத்து, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்டத் துணைச் செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் அனைவரையும் வரவேற்று பேசினார் .

விழாவில் கலந்துகொண்ட மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே. கம்பன், புகைப்பட கண்காட்சியில் பணியாற்றிய அனைவரையும் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.

பின்னர்அவர் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கையை இன்றைய இளைய தலைமுறை இந்த புகைப்பட கண்காட்சியை கண்டு தெரிந்து கொள்ள வேண்டும். திருவண்ணாமலையில் அருணை தூய்மை அமைப்பை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் வேலு தொடங்கி வைத்து இன்று வரை சிறப்பாக அவரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது.

இந்த புகைப்பட கண்காட்சி தொடங்கி எட்டு நாட்களாக சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியை சிறப்பாக ஏற்பாடு செய்ய அனுமதிக்கிட்ட முதலமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புகைப்படக் கண்காட்சியை 75 ஆயிரத்திற்கும், மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது . அதில் முதன்மை மாவட்டமாக திருவண்ணாமலையை அமைச்சர் வேலு சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.தமிழ்நாடு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் 50 ஆண்டுகள் கழித்தும் பேசப்படும்.

தற்போது நகராட்சி அளவில் உள்ளது திட்டம் ஜூன் 3 கலைஞர் பிறந்த நாளன்று நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது நவீன தமிழ்நாட்டையும் திராவிடத்தையும் உருவாக்கிய சிற்பி முதல்வர் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

நிறைவு விழாவில், எக்ஸ்னோரா இந்திரராஜன், வணிகர்கள் சங்கத் தலைவர் சண்முகம், எழுத்தாளர் அனிதா கிருஷ்ணமூர்த்தி, பத்திரிகையாளர் சித்தார்த்தன், பள்ளி தாளாளர் சின்ராஜ், ஒன்றிய செயலாளர் ,ஒன்றிய குழு தலைவர்கள், வழக்கறிஞர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Updated On: 21 May 2023 1:41 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
 2. இந்தியா
  ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு
 3. தமிழ்நாடு
  இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை:முதல்வர் ...
 4. தர்மபுரி
  ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
 5. ஈரோடு மாநகரம்
  சப்பாத்தியில் பூச்சி, ஈரோட்டில் உணவகம் மூடல்
 6. ஈரோடு மாநகரம்
  கனி மார்க்கெட்டில் தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடக்கம்
 7. விளையாட்டு
  Suryakumar yadav blazes against australia in first odi-காத்திருந்து...
 8. சங்கரன்கோவில்
  கரிவலம் வந்த நல்லூர் அரசு ஆரம்ப பள்ளியை தரம் உயர்த்திய பள்ளி...
 9. ஈரோடு
  பவானிசாகர் அணையின் இன்றைய (செப்.,23) நீர்மட்ட நிலவரம்
 10. இந்தியா
  2024 குடியரசு தின விழா: ஜோ பைடனுக்கு அழைப்பு