/* */

கருணாநிதியின் சிலை வைப்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு: எச்.ராஜா

Today Political News in Tamil -கிரிவலப்பாதையில் கருணாநிதியின் சிலை வைப்பதை பாஜக ஏற்கவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம் என எச்.ராஜா கூறினார்

HIGHLIGHTS

கருணாநிதியின் சிலை வைப்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு:  எச்.ராஜா
X

பா.ஜ.க. சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசும் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா

Today Political News in Tamil - திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவண்ணாமலை திருவூடல் தெருவில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 8 ஆண்டுகளாக யாரும் நிறைவேற்றாத, நிறைவேற்ற முடியாது என்று கருதுகின்ற விஷயங்கள் பா.ஜ.க. அரசினால் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் வெளிநாட்டில் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டது. ஆனால் கொரோனாவிற்கு மத்திய அரசு தடுப்பூசி கண்டுபிடித்து 200 கோடி மக்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது.

இதேபோல் பல்வேறு திட்டங்களில் பிரதமர் மோடியின் அரசு முன்மாதிரியான அரசாங்காமாக செயல்பட்டு வருகின்றது. உக்ரைன் நாட்டில் இருந்து 10 ஆயிரத்து 300 மாணவர்களை ஒரு கீறல் கூட இல்லாமல் மீட்டு வந்து உள்ளோம் என்று தமிழக முதல்- அமைச்சர் சொல்கிறார். இது ஒரு பொய்யான தகவல். 4 மந்திரிகளை அண்டை நாடுகளில் அமர்த்தி தமிழ்நாடு சேர்ந்த உள்பட 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களை மத்திய அரசு அழைத்து வந்து உள்ளது.

தமிழக அரசில் ஊழல் மட்டுமே நடைபெற்று வருகின்றது. ஊழல் நடக்கும் போதே எங்கள் மாநில தலைவர் உடனடியாக பிடித்து விடுவதால் தமிழக அரசாங்கள் உடனடியாக பின்வாங்கி முடிவை மாற்றி வருகின்றது.

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஊழல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகின்றது. அதிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த நிலையங்களில் நெல் விதைக்காதவனும் நெல் விற்பனை செய்ய வருகின்றனர். கலெக்டரிடமும் இது குறித்து புகார் செய்யப்பட்டு உள்ளது. இங்கு ஒவ்வொரு விவசாயியும் வஞ்சிக்கப்படுகிறார்.

தி.மு.க. இந்து கோவில் விஷயத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்டு இருகின்றது. கோவில் நகைகளை உருக்குவது என்பது கோவில் நகைகளை திருடுவதற்கு ஒப்பாகும். தி.மு.க.விற்கு சித்தாந்தம் ரீதியாக கடுமையான எதிர்ப்பை காட்டி வரும் கட்சி பா.ஜ.க. ஆகும். இது வரை தமிழகத்தில் 7 லாக்அப் மரணங்கள் நடந்து உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. காவல் துறை என்ற ஒரு துறை தமிழகத்தில் இருக்கிறதா என்றே தெரியவில்லை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைப்பதை பாஜக ஏற்கவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம் என்றார் .

பட்டியின் போது மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், கோட்ட பொறுப்பாளர் குணசேகரன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Jun 2022 9:25 AM GMT

Related News