/* */

திருவண்ணாமலையில் முக்கிய குளங்களில் ஒன்றான அய்யங்குளம் தூர்வாரப்படும்: அமைச்சர் தகவல்

திருவண்ணாமலையில் முக்கிய குளங்களில் ஒன்றான அய்யங்குளம் தூர்வாரப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் முக்கிய குளங்களில் ஒன்றான அய்யங்குளம் தூர்வாரப்படும்: அமைச்சர் தகவல்
X

திருவண்ணாமலையிலுள்ள அய்யங்குளத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் முக்கிய குளங்களில் ஒன்றான அய்யங்குளம் தூர்வாரப்படும், அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருவண்ணாமலையில் முக்கிய குளங்களில் ஒன்றாக திருவண்ணாமலை நகரில் அய்யங்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் ஆண்டுக்கு 5 முறை அண்ணாமலையார் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். மேலும் அமாவாசை நாட்களில் இந்த குளக்கரையில் ஏராளமானவர்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வார்கள். சில வருடங்களுக்கு முன்பு இந்த குளத்தில் தீர்த்தவாரி நடந்தபோது 4 பேர் சேற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்தநிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அய்யங்குளத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: அய்யங்குளத்தில் ஆண்டுக்கு 5 முறை தீர்த்தவாரி நடைபெறும். மேலும் கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த பின்னர் 3 நாட்கள் தெப்பல் திருவிழா நடைபெறும்.

இதில் ஆன்மிக பக்தர்கள் பலர் கலந்து கொள்வார்கள். இங்கு கடந்த ஆட்சியில் நடைபெற்ற தீர்த்தவாரியில் 4 பேர் இறந்தனர். இந்த சம்பவம் இன்றும் என் நினைவில் உள்ளது. குளம் சேறும், சகதியுமாக உள்ளது, இதை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் இப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்தனர்.

எனவே சட்டமன்ற உறுப்பினர் நிதி அல்லது தூய்மை அருணை சார்பில் இந்த குளம் தூர்வாரப்படும். படிக்கட்டுகள் செப்பனிப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவரிடம் அங்கிருந்த பக்தர்கள் இரவில் இங்கு மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளது. அதிக அளவில் குற்ற செயல்கள் நடைபெறுகின்றது, எனவே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் கண்காணிப்பு கேமராவும் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆய்வின்போது ஆட்சியர் முருகேஷ், மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், நகரசெயலாளர் கார்த்திவேல்மாறன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் பிரியா விஜய் ரங்கன், குட்டி புகழேந்தி, நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி கமிஷனர் தட்சிணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பலர் உடன்இருந்தனர்.

Updated On: 30 May 2023 1:26 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  3. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  4. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  5. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  6. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  7. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  8. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  9. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  10. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்: