திருவண்ணாமலையில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

திருவண்ணாமலையில் சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலையில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
X

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினரால், மது விலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 160க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட வாகனங்கள், வரும் 28.09.2021ம் தேதி காலை 10 மணிக்கு, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.

பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய்த்தடுப்பு பாதுகாப்பு மற்றும் அரசின் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். கட்டாயமாக முக கவசம் அணிந்து வந்து நுழைவு கட்டணமாக ரூபாய் 100, முன் பணமாக ரூபாய் 1,000 செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு துணை காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, திருவண்ணாமலை மாவட்டம், அவர்களை அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.த்துள்ளார்.

Updated On: 22 Sep 2021 1:41 PM GMT

Related News