/* */

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மறுவூடல் விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மறுவூடல் விழா, பக்தர்களின் பங்கேற்பின்றி நடந்தது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மறுவூடல் விழா
X

மறுவூடல் நிகழ்வின்போது, மேளதாளங்கள் முழுங்க ஸ்வாமி எழுந்தருளினார்.

கார்த்திகை தீபம் முடிந்த அடுத்த நாளும், மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாளும் வருடத்தில் 2 முறை பக்தர்களை போலவே அருணாசலேஸ்வரரும் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை கருத்தில் கொண்டு இன்று கிரிவலம் வர வேண்டிய அருணாசலேஸ்வரர் திருவூடல் விழா நிறைவடைந்ததும் நேற்று மலையை சுற்றி கிரிவலம் சென்றார். பின்னர் ராஜகோபுரத்தின் அருகில் உள்ள முருகர் சன்னதியில் எழுந்தருளினார்.

இந்த நிலையில் இன்று கோவிலில் மறுவூடல் விழா நடந்தது. முன்னதாக அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமி மேளதாளங்கள் முழுங்க அங்கிருந்து அவரது சன்னதியில் எழுந்தருளினார். நேற்று ஊடல் ஏற்பட்டு கோவிலுக்கு வந்த அம்மன், சாமி சன்னதியில் உற்சவ மூர்த்தி சன்னதியில் கதவை மூடி இருப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் அருணாசலேஸ்வரர் உற்சவ மூர்த்தி சன்னதியின் முன்பு, மேள தாளங்கள் முழங்க முன்னும், பின்னும் 3 முறை ஆடியபடி வந்து ஊடல் செய்து, சாமி அம்மனுடன் சேருவது போன்று, மறுவூடல் விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் ஓதுவார், சாமியின் முன்பு, திருவூடல் மற்றும் மறுவூடல் விழாவின் கதையை பாடி காண்பித்தார்.

இதில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி தலைமையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதில் கோவில் பணியாளர்களும், சிவாச்சாரியார்களும், உபயதாரர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

Updated On: 16 Jan 2022 1:27 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?