/* */

அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 1.60 கோடி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.60 கோடி பெறப்பட்டது.

HIGHLIGHTS

அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 1.60 கோடி
X

பைல் படம்

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி நாட்களில் வெளியூர் , வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் லட்ச கணக்கில் வந்து கிரிவலம் சுற்றியும் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தும் செல்கின்றனர்.

மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு மாவட்டங்கள், வெளிநாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த பணியை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 60 லட்சத்து 13 ஆயிரத்து 349 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

246 கிராம் தங்கம், 1 கிலோ 316 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது கோயில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On: 4 Oct 2022 12:25 AM GMT

Related News