/* */

நடப்பு பருவத்திற்கு தேவையான யூரியா ரெயில் மூலம் திருவண்ணாமலை வருகை

நடப்பு பருவத்திற்கு தேவையான யூரியா மணலி, தூத்துக்குடியில் இருந்து 2,224 டன் ரெயில் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தது.

HIGHLIGHTS

நடப்பு பருவத்திற்கு தேவையான யூரியா ரெயில் மூலம் திருவண்ணாமலை வருகை
X

2,224 டன் யூரியா ரெயில் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான யூரியா 2 ஆயிரத்து 224.4 டன் யூரியா, 313 டன் காம்ப்ளக்ஸ், 63.85 டன் சூப்பர் பாஸ்பேட், 124 டன் அம்மோனியம் குளோரைடு ஆகிய உரங்கள் மணலி மற்றும் தூத்துக்குடியில் இருந்து ரெயில் மூலம் திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.

இதை வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் உரங்கள் லாரிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் கூறியதாவது:-

நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 3 ஆயிரத்து 397 டன் யூரியா, 1470 டன் டி.ஏ.பி., 834 டன் பொட்டாஷ், 5 ஆயிரத்து 257 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 388 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரையின் படி பயிருக்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் ரசீது பெற்று வாங்கி பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

உர விற்பனை நிலையங்களின் விவசாயிகள் விரும்பாத இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது தொடர்பான புகார்கள் பெறப்பட்டால் உர உரிமங்கள் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 23 Sep 2022 12:16 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  2. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  4. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  5. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  7. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  9. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்