திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் ஆண்டு விழா

கல்லூரியின் சிறப்புகளை பார்க்கும்போது அடுத்த ஆண்டு மீண்டும் இந்த கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்படுகிறேன் என மருத்துவர் கம்பன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் ஆண்டு விழா
X

சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரியின் முன்னாள் மாணவர் தலைவர்கள் சார்பாக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கவிஞர் ஏடிஎம் சந்திரமோகன், நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளிலும் பல்கலைக்கழகத் தேர்வுகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு அருணை பொறியியல் கல்லூரி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் டாக்டர் கம்பன் பேசியதாவது:

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியின் சிறப்புகளை பார்க்கும்போது அடுத்த ஆண்டு மீண்டும் இந்த கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்படுகிறேன். அதற்கு காரணம் என்னவென்றால் இன்று நீங்கள் அனுபவிக்கும் பல விஷயங்களை நாங்கள் இழந்தது தான் காரணம். கல்வி கற்கும் போது எல்லா விஷயத்தையும் சேர்த்து படியுங்கள், புத்தகத்தோடு நின்று விடாமல் பெரியவர்களின் அனுபவத்தையும் சேர்ந்து கற்றுக்கொள்ளுங்கள் , இன்று ஆசிரியர்கள் தான் உலகமே இது அறிவுரை அல்ல அனுபவம்.

இங்கே படிக்கின்ற மாணவனும் மாணவியும் நாளைக்கு ஏதேனும் ஒரு மேடையில் சிறப்பு விருந்தினராக வரவேற்கப்பட வேண்டும். சிறப்பு விருந்தினர்கள் என்பவர்கள் சாதித்து இருப்பவர்களாக இருப்பார்கள் ,அல்லது சாதித்துக் கொண்டு இருப்பார்கள் அல்லது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள், நாங்களெல்லாம் மூன்றாவது ரகம்.

இங்கு விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் பல்கலைக்கழக தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பேசியதாவது:

இப்போது திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறை சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது என்றார் , கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள் அதோடு வாழ்க்கை கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள் அனுபவ கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் கல்வி ஒன்றுதான் உங்களை உயர்த்தும் எனக் கூறினார்.

முன்னதாக கல்லூரிக்கு வந்த சிறப்பு விருந்தினர்களை மாணவர்கள் ஒயிலாட்டம் கரகாட்டம் மயிலாட்டம் போன்ற பாரம்பரிய ஆட்டங்கள் ஆடி வரவேற்றார்கள். தேசிய மாணவர் படையினர் மரியாதை அணிவகுப்பு நடத்தினர்.

விழாவில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் ,மாணவர்கள், பெற்றோர்கள் ,முன்னாள் மாணவர்கள் ,முன்னாள் மாணவர் சங்க தலைவர்கள்,நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் , நகரமன்ற உறுப்பினர்கள் காலேஜ் கு.ரவி, பிரகாஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரியின் முன்னாள் மாணவர் தலைவர்கள் சார்பாக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கவிஞர் ஏடிஎம் பி.லாயர் சந்திரமோகன், நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

Updated On: 19 May 2022 2:06 AM GMT

Related News

Latest News

 1. விழுப்புரம்
  விழுப்புரத்தில் மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
 2. தேனி
  கம்பத்தில் டூவீலர் நிலை தடுமாறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு
 3. காஞ்சிபுரம்
  குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் காஞ்சிபுரம் மாவட்ட...
 4. இந்தியா
  உதய்பூர் கொலைகாரனுக்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பு இல்லை: ஐ.டி. பிரிவு...
 5. தேனி
  தேனி என்.எஸ்., கல்லுாரியில் 'கல்லுாரி கனவு' திட்ட முகாம்
 6. பாளையங்கோட்டை
  பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 96வது பட்டமளிப்பு விழா
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் கடந்த 26 நாட்களில் மட்டும் 204 பேருக்கு கொரோனா...
 8. தேனி
  ஆண்டிபட்டியில் டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து: விவசாயி பலி
 9. தேனி
  கஞ்சா விற்ற இரு வியாபாரிகள் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது
 10. அரியலூர்
  குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைப்பு