/* */

அண்ணாமலையார் கோயில் ஆயிரம் கால் மண்டபம் பக்தர்களின் பார்வைக்காக திறப்பு

அண்ணாமலையார் கோயிலில் ஆயிரம் கால் மண்டபத்தை பக்தர்களின் பார்வைக்காக துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

அண்ணாமலையார் கோயில் ஆயிரம் கால் மண்டபம் பக்தர்களின் பார்வைக்காக திறப்பு
X

சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி  பக்தர்களின் பார்வைக்காக ஆயிரம் கால் மண்டபத்தினை திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தினை பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்காக இந்த ஆண்டு மின் விளக்குகள் வசதியுடன் கூடிய ஆயிரம் கால் மண்டபத்தின் தூண்கள் மற்றும் 108 சிவதாண்டவர் ஓவியங்கள் அடங்கிய படங்கள் பார்வையிடுவதற்கு ஏதுவாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி கலந்து கொண்டு பக்தர்களின் பார்வைக்காக ஆயிரம் கால் மண்டபத்தினை திறந்து வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி கோவிலை சுற்றியுள்ள மாடவீதியான தேரடி தெரு, திருவூடல் தெரு, பேகோபுர தெரு, பெரிய தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த பணியை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது நடைபாதையில் அமைத்துள்ள தெருவோர வியாபாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். கடை உரிமையாளர்கள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடையின் முகப்பு பகுதியில் மேற்கூரை அமைப்பதை தவிர்த்தல் வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும் தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்தும், மகாதீபத்தன்று காவல் துறை, இந்துசமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளின் மூலம் அமைக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி பணி அலுவலர்கள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தீபத் திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு 'மீம்ஸ்' போட்டி

தீபத்தின் போது பொதுமக்கள் குற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான குற்ற விழிப்புணர்வு, நகை பறிப்பு, பிக்பாக்கெட், குழந்தை கடத்தல், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள், மூத்த குடிமக்களுக்கான உதவி, தீயணைப்பு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் தூய்மை, பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர் தொடர்பான 'மீம்ஸ்'கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயார் செய்து தங்களுடைய பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்களை இணைத்து smctvmpolice@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சிறந்த 'மீம்ஸ்'களாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 நபர்களுக்கு கலெக்டர் முருகேஷ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோரால் நினைவு பரிசு மற்றும் வெகுமதி வழங்கப்படும். மேலும் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் 'மீம்ஸ்'கள் மகா தீப திருவிழாவின் போது பொதுமக்களிடையே திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தங்களுடைய 'மீம்ஸ்'களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். இந்த தகவலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

Updated On: 24 Nov 2022 2:17 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்