/* */

ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி மனைவி

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அதிமுக நிர்வாகியின் மனைவி, குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி மனைவி
X

 குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டஅதிமுக நிர்வாகி குடும்பத்தினர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனார்.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் அதிமுக கிளை செயலாளர் மனைவி சவுமியா தர்ணாவில் ஈடுபட்டார்.

இது குறித்து அவர், ஆட்சியர் முருகேஷுக்கு அளித்துள்ள மனுவில், திருவண்ணாமலை அடுத்த தண்டரை அருகே நல்லூர் கிராமத்தில் அதிமுக கிளை செயலாளராக எனது கணவர் பிரகாஷ் உள்ளார். எனது கணவர் கடந்த 17-ம் தேதி நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக 3 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கினர். இதில் அவருக்கு வலது கை எலும்பு உடைந்து விட்டது. மேலும் அவர்கள் எங்களை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.

வலியால் துடித்த எனது கணவரை, கிராம மக்கள் மீட்டனர். பின்னர் அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வரும் கண வரிடம், வெறையூர் காவல் துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

ஆனால், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் எங்களை அலைகழித்து வருகின்றனர். மேலும் உண்மைக்கு மாறான தகவல்களை வைத்து எங்கள் மீது பொய்யான வழக்கை பதிவு செய்த போலீசார் மீதும் கணவரை தாக்கியவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். மேலும் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும், எனது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர்கள், வெறையூர் காவல்துறையினரை கண்டித்து முழக்கமிட்டனர். இதையடுத்து, அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினியிடம் மனு அளித்தனர்.

Updated On: 1 Feb 2023 11:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  2. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  3. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  5. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  6. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  7. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  9. சினிமா
    கில்லி படத்துல அது ஃபேக்காம்.. தரணியே சொல்லிட்டாரு..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...