/* */

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 65  நிறுவனங்கள் மீது நடவடிக்கை
X

விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை (பைல் படம்)

திருவண்ணாமலை மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேசிய விடுமுறை தினமான (சுதந்திர தின விழா) நேற்று கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தேசிய விடுமுறை நாளான நேற்று சட்டப்படி பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமலும் மாற்றுமுறை விடுமுறை அளிக்காமலும் அதற்கான முறையான அறிவிப்பு அளித்து அனுமதி பெறாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 32 நிறுவனங்கள் மீதும், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 32 நிறுவனங்கள் மீதும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனத்தின் மீதும் என மொத்தம் 65 நிறுவனங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்று, அரசு ஒப்பந்த பணிகள் மற்றும் இதர பணிகளில் குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தவில்லை என தீர்மானம் நிறைவேற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 16 Aug 2023 6:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...